உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி ஓய்வு பாராட்டு விழா 

பணி ஓய்வு பாராட்டு விழா 

புதுச்சேரி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இருவருக்கு, துறை இயக்குநர் இளங்கோவன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் சமையல் கலைஞர்களாக பணியாற்றிய அலமேலு, பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றனர்.இவர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் பங்கேற்று, அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.இதில், நலத்துறையின் கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், பட்டாபிராமன், விடுதி காப்பாளர்கள் ராஜா, அருள்தாஸ் மற்றும் விடுதி ஊழியர்கள், மாணவர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டுனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை