மேலும் செய்திகள்
கூட்டுறவுக்கல்வி வளர்ச்சி நிதி வழங்கல்
07-Oct-2026
புதுச்சேரி: கூட்டுறவு சங்கத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. புதுச்சேரி பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் கண்காணிப்பாளராக பணி புரிந்த ஜெயகோபாலன் ஓய்வு பெற்றார். அதையடுத்து, சங்கத்தின் சார்பில், பாராட்டு விழா புதுச்சேரியில் நடந்தது. சங்க தலைவர் வினாயகமூர்த்தி அவரை பாராட்டி ஓய்வு பலன் நிதியாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில், துணை தலைவர் முருகதாஸ், செயலாளர் அன்பரசன், இயக்குநர்கள், புவியரசு, செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
07-Oct-2026