உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இருள் சூழ்ந்த சந்திப்புகளால் இ.சி.ஆரில் விபத்து அபாயம்

இருள் சூழ்ந்த சந்திப்புகளால் இ.சி.ஆரில் விபத்து அபாயம்

புதுச்சேரி: இ.சி.ஆர் மடுவுபேட் சந்திப்பு இருள்சூழ்ந்து கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கருவடிக்குப்பம் சிவாஜி சிலை முதல் முருகா தியேட்டர் வரையுள்ள கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. சென்னையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்குள் வருகின்றன. அதுபோல, புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு லாரி, வேன், கார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் 24 மணி நேரமும் செல்கின்றன.இதன் காரணமாக, பகலில் மட்டுமல்லாமல், இரவிலும் இ.சி.ஆரில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் இ.சி.ஆரில் கடந்த ஒரு மாதமாக தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது. குறிப்பாக, கருவடிக்குப்பம் சிவாஜி சிலை முதல் ராஜிவ் சிக்னல் வரை 4.3 கி.மீ., தொலைவிற்கு இ.சி.ஆர்., இருள் சூழ்ந்து கும்மிருட்டாக கிடக்கிறது.முக்கியத்துவம் வாய்ந்த இ.சி.ஆர் மடுவுபேட் சந்திப்பும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. ைஹமாஸ் விளக்குகள் எரியவில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் நீண்ட துாரம் பயணித்த களைப்புடன், அதிவேகமாக வருகின்ற வாகனங்களின் ஓட்டுனர்கள், டூ வீலர்களில் வருபவர்களையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் இருட்டு காரணமாக சரியாக பார்க்க முடிவதில்லை.இதனால் இப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே, இ.சி.ஆரில் பழுதடைந்துள்ள அனைத்து ைஹமாஸ் விளக்குகளையும் சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ