சாலை அமைக்கும் பணி துவக்கம்
புதுச்சேரி: கருவடிக்குப்பம் சண்முகா நகர் கோல்டன் அவென்யூவில் சாலை அமைக்கும் பணியினை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.காலாப்பட்டு தொகுதி, கருவடிக்குப்பம், சண்முகா நகர், கோல்டன் அவென்யூவில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 29 லட்சத்து 15 ஆயிரம் செலவில் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.நிகழ்ச்சியில், தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், கருவடிக்குப்பம் கிராம பஞ்சாயத்தார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.