உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை அமைக்கும் பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சாலை அமைக்கும் பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

திருபுவனை: திருவாண்டார்கோவில் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் ரூ.16 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருவண்டார்கோவில் வெங்கடேஷ்வரா நகர் மற்றும் விரிவாக்க பகுதியில் ரூ.16 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. டி.வி.எஸ்., லுாகாஸ் நிறுவனம் அருகே நடந்த விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் தலைமைதாங்கி பூமி பூஜை செய்து பணியை துவக்கிவைத்தார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலை பொறியாளர் மனோகரன், ஒப்பந்ததாரர் ராமமூர்த்தி, ஜே.சி.எம்., மக்கள் மன்ற தொகுதி தலைவர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் வடிவேல் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை