மேலும் செய்திகள்
முதலியார்பேட்டையில் வாய்க்கால் பணி துவக்கம்
30-Dec-2025
புதுச்சேரி, ஜன. 9- முதலியார்பேட்டை தொகுதியில் 35.16 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மறு சீரமைக்கும் பணியை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட வசந்தா நகர், ஏழுமலையான் நகர், மறைமலை நகர் ஆகிய பகுதிகளில் சாலையை மறுசீரமைப்பு செய்து, அவற்றை மேம்படுத்தும் பணிக்காக, 35.16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, சம்பத் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், பொறியாளர் சுந்தரமூர்த்தி, பொதுசுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் பக்தவச்சலம் உதவிப்பொறியாளர் ரமேஷ்குமார், இளநிலைப் பொறியாளர் தேவி பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
30-Dec-2025