உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.சி.ஆர்., தாலுகா அலுவலகம் எதிரே சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்கள்

இ.சி.ஆர்., தாலுகா அலுவலகம் எதிரே சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்கள்

உடனடியாக மூட கலெக்டர் உத்தரவுபுதுச்சேரி: இ.சி.ஆர்., தாலுகா அலுவலகம் அருகே சாலையோர பள்ளங்களை உடனடியாக மூடி சரிசெய்ய ஒப்பந்தாரருக்கு கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.புதுச்சேரி இ.சி.ஆரில் உழவர்கரை தாலுகா அலுவலகத்தில் இருந்து லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் திரும்பும் வரை குழாய்கள் புதைப்பதிற்காக சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடி சாலையை சீரமைக்கப்படாமல் உள்ளது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு பெய்த மழையின்போது, இப்பகுதியில் 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. அப்போது, சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல், ஏராளமான வாகன ஓட்டிகள் விழுந்தனர். கார்களும் பள்ளத்தில் சிக்கியது.இது குறித்த புகாரின் பேரில் கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், ஒப்பந்ததாரர்கள் குழாய் பதிக்கும் பணியை ஆய்வு செய்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோரும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தினர்.குழாய் பதிக்கும் பணி முடிந்த இடங்களில் தோண்டிய பள்ளங்களை விரைவாக மூடி போக்குவரத்து பயன்பாட்டிற்கு உகந்த வகையில் சாலையை சீரமைக்க வேண்டும் என ஒப்பந்தாரருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !