உள்ளூர் செய்திகள்

சாலை பணி துவக்கம்

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில், 43 லட்சம் மதிப்பீட்டில், சாலை அமைக்கும் பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.அரியாங்குப்பம் புறவழிச்சாலை அருகே உள்ள பி.சி.பி., நகரில், சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருந்ததால் எம்.எல்.ஏ.,விடம் சாலை அமைக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ரூ. 43 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ