உள்ளூர் செய்திகள்

 சாலை பணி

புதுச்சேரி: முத்தியால்பேட்டை வெள்ளவாரி வீதியில், அமைந்துள்ள சுந்தர விநாயகர் பேட்டை, முதல் மற்றும் இரண்டாவது குறுக்கு வீதிகள் மிகத் தாழ்வாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கியது. இதனையடுத்து அப் பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்தனர். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 36 லட்சம் ரூபாய் ஒதுக்கிடு செய்யப்பட்டது. அதற்கான பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்ரமணியம், நகராட்சி ஊழியர்கள் உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்