உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையொட்டி, புதுச்சேரி முக்கிய சாலைகளில், வாகனகள் மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.புதுச்சேரியில், நாளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையால், ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னலில், போக்குவரத்து நெரிசலில், வாகனங்கள் சிக்கி தவித்து வருகின்றன. வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜ் சாலை, புஸ்சி வீதி, ரெட்டியார்பாளையம், மரப்பாலம், லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட சாலையில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.நகரப்பகுதியில், பொருட்கள் வாங்க தினமும் மக்கள் வந்து செல்வதற்குள் பெரும் போராட்டமாகி வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல், போக்குவரத்து போலீசார் திணறி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையொட்டி, மறைமலை அடிகள் சாலை, இ.சி.ஆர். சாலை, கோரிமேடு சாலை உள்ளிட்ட முக்கிய சாலையில், மிகவும் குறைந்த எண்ணிக்கையில், வாகனங்கள் சென்றன. மக்கள் அதிக அளவில், நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை