உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில் பயணிகளிடம் ரூ.6 லட்சம் கொள்ளை; போலீஸ் சோதனையில் தடயங்கள் சிக்கியது

ரயில் பயணிகளிடம் ரூ.6 லட்சம் கொள்ளை; போலீஸ் சோதனையில் தடயங்கள் சிக்கியது

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் நின்ற ரயிலில் கொள்ளை நடந்த இடத்தில் போலீசார் சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.கடந்த 20ம் தேதி இரவு சென்னையில் இருந்து தஞ்சாவூர் சென்ற உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 2 மணிக்கு, நெல்லிக்குப்பம் ரயில்வே ஸ்டேஷனில் 15 நிமிடம் நின்று சென்றது. அப்போது, ரயிலில் பயணம் செய்த சென்னை பல்லாவரம் கோபிநாத் மனைவி ஆர்த்தி,34; வடபழனி சூரியநாராயணன் மனைவி காயத்ரிதேவி,63; தஞ்சாவூர் மதியழகன் மனைவி அமுதா,54; ஆகியோரின் கை பைகளை கொள்ளையர்கள் திருடி சென்றனர். அதில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 15 சவரன் நகைகள், 3 மொபைல் போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது.புகாரின் பேரில் கடலுார் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். ரயில்வே எஸ்.பி., செந்தில்குமார் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி., மகாதேவன், இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆகியோர் நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டு கொள்ளையர்கள் வீசிச் சென்ற மொபைல் போன் கவர், ஆதார் கார்டுகளில் இருந்த விரல் ரேகை தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து ஒரு கி.மீ., துாரம் வரை ஓடி நின்றது.கைரேகை தடயங்கள் கிடைத்துள்ளதால் விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என போலீசார் கூறினர்.கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து நெல்லிக்குப்பம் ரயில்வே ஸ்டேஷனில் பழுதடைந்த மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை