உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரோட்டரி தலைவர் பதவி ஏற்பு

 ரோட்டரி தலைவர் பதவி ஏற்பு

புதுச்சேரி: ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஆரோசிட்டியின் 2026-27ம் ஆண்டிற்கான புதிய தலைவர் பதவி ஏற்பு விழா பாண்டி ஓஷன் பார்க் வளாகத்தில் நடந்தது. ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஆரோசிட்டி புதிய தலைவராக டாக்டர் முத்துக்குமரன் பதவி ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பாலமுரளி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழக எம்.எல்.ஏ., சவுமியா அன்புமணி பங்கேற்று, சமூக சேவையின் அவசியம், பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனிதநேய பணிகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொடர்ந்து ஒரு லட்சம் மதிப்பிலான பனை விதைகள் வழங்கல், மரம் நடும் இயக்கம் துவக்கம், பொருளாதாரத்தில் பின்தங்கிய 5 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கல், விவசாயிகளுக்கு ஸ்பிரேயர் வழங்கல், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பிறையோன், ஜாகிர் உசேன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !