உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மக்களை மிரட்டிய ரவுடி கைது

கத்தியை காட்டி மக்களை மிரட்டிய ரவுடி கைது

புதுச்சேரி: கத்தியை காட்டி மக்களை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் கனகன் ஏரி அருகே நேற்று முன்தினம் இரவு ரவுடி ஒருவர் கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார். தகவலறிந்த ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, கத்தியுடன் திரிந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், சண்முகாபுரம், அண்ணா வீதியை சேர்ந்த சீனிவாசன் மகன் தட்சிணாமூர்த்தி, 20, என்பதும், ரவுடியான அவர் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து தட்சிணாமூர்த்தியை கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி