உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கொலை முயற்சி வழக்கில் ரவுடி கைது

 கொலை முயற்சி வழக்கில் ரவுடி கைது

அரியாங்குப்பம்: காங்., பிரமுகரை கொலை செய்ய முயன்ற வழக்கில், தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் கலையரன். இவர் காங்., பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு உதவியாளராகவும், இருந்தார். இந்நிலையில், அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்த ரவுடியான விஷ்வா, 24; உட்பட 9 பேர் கொண்ட கும்பல், கலையரசனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இதுகுறித்து தகவலறிந்த, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார், கடந்த மே மாதம் 19ம் தேதி அரியாங்குப்பம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த வசந்த், 21; உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில், கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ரவுடி, விஷ்வா, 24; என்பவரை அரியாங்குப்பத்தில் போலீசார் நேற்று கைது செய்தனர். பின், அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ