உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எலிபேஸ்ட் சாப்பிட்டு ரவுடி தற்கொலை 

எலிபேஸ்ட் சாப்பிட்டு ரவுடி தற்கொலை 

புதுச்சேரி: உருளையன்பேட்டை, முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரத்ராஜ், 26. இவரது மனைவி ஜோஸிமரிஸ். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ரவுடியான சரத்ராஜ் மீது 2 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சரத்ராஜ் மீது வழக்குகள் இருப்பதால், சிறைக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக இருந்ததால் அச்சத்தில் இருந்து வந்தார். அவரிடம் வழக்கு செலவுக்கு காசு இல்லை என கூறி மனைவியிடம் வாழ்க்கையை வெறுத்து புலம்பியுள்ளார். அதற்கு ஜோஸி மரிஸ் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதற்கிடையே அவரது குழந்தை அழுததால், அதனை சரத்ராஜ் கண்டித்தார். இதனை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சரத்ராஜ் வீட்டில் இருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கினார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ