மேலும் செய்திகள்
தொடர் குற்ற சம்பவங்கள் :வாலிபருக்கு 'குண்டாஸ்'
04-Nov-2026
புதுச்சேரி: காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சந்தைபுதுக்குப்பம், ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் ஞானமூர்த்த,29. ரவுடியான இவர் மீது கத்தியை காட்டி மிரட்டுதல், அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரின் குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் காட்டேரிக்குப்பம் போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் குலோதுங்கனுக்கு பரிந்துரை செய்தனர். அதனை ஆய்வு செய்த கலெக்டர் ஞானமூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஏற்கனவே ஒரு வழக்கு சம்பந்தமாக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானமூர்த்தியிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
04-Nov-2026