உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி சிறையில் அடைப்பு

பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி சிறையில் அடைப்பு

வில்லியனுார்: வில்லியனுாரில் மாமூல் கேட்டு, அரிசிக் கடை மீது  பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடியை போலீசார் கைது செய்து, செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, வில்லியனுார் தில்லை நகரை சேர்ந்த பாபு. இவர், தனது சகோதரர் ராஜேந்திரனுடன் சேர்ந்து வில்லியனுார் மார்க்கெட் வீதியில் பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் வில்லியனூர் சாமியார்தோப்பை சேர்ந்தவர் பெருமாள் மகன் பிரபல ரவுடியான வினோத்குமார், 25. இவர், நேற்று முன்தினம் இரவு அரிசி கடைக்கு வந்து, மாமூல் கொடுக்குமாறு பாபுவிடம் கேட்டுள்ளார். அப்போது பாபு பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார், தான் மறைத்து வைத்திருந்த மூன்று பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து கடைக்குள் வீசி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.  கடைக்குள் இருந்த ராஜேந்திரன், பாபு மற்றும் அவரது மனைவி திரிபுரசுந்தரி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.   இது குறித்து பாபு கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, அன்று இரவே வினோத்குமாரை பிடிக்க சென்றனர். அப்போது போலீசாரை கண்டு தப்பிச்செல்ல முயன்ற வினோத்குமார் கீழே வழுக்கி விழுந்ததில், அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, வினோத்குமாரை கைது செய்து, நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி