மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
24-Nov-2026
வில்லியனுார்: புதுச்சேரி, பத்துக்கண்ணு – செல்லிப்பட்டு செல்லும் சாலையில் பொதுமக்களை வாலிபர் ஒருவர் கத்தி காட்டி மிரட்டி வருவதாக வில்லியனுார் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கத்தியுடன் பொது மக்களை மிரட்டி கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், தமிழகப் பகுதியான அம்மணங்குப்பம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ரவுடியான குமார் (எ) செல்வகுமார், 25, என்பதும், இவர் மீது உள்ள வழக்கு செலவிற்காக பொதுமக்களை கத்தி காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர். பின், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
24-Nov-2026