உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக ரூ. 1 லட்சம் மோசடி

குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக ரூ. 1 லட்சம் மோசடி

புதுச்சேரி: திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டையை சேர்ந்தவர் முனியப்பன், 39. இவரை மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டு, குறைந்த வட்டியில் ரூ. 6 லட்சம் லோன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதைநம்பி, லோன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து, மர்மநபருக்கு 1 லட்சத்து 5 ஆயிரத்து 399 ரூபாய் செலுத்தி ஏமாந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, மேல் விசாரணைக்காக திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ