உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1.02 லட்சம் திருட்டு

 மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1.02 லட்சம் திருட்டு

புதுச்சேரி: மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.02 லட்சம் திருடிய மர்ம நபரை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். புதுச்சேரி, நீடராஜப்பையர் வீதியை சேர்ந்தவர் நிஷாந்த், 27; இவர் மேற்கண்ட முகவரியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் கடையை பூட்டிவிட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து, அவர் நேற்று காலை, 7:45 மணிக்கு கடையை திறக்க சென்றபோது, கடையின் ஷட்டரில் பூட்டு இல்லாமல் இருந்தது. இதனைக் கண்ட நிஷாந்த் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, கடையின் உள்ளே சென்று கல்லாப் பெட்டியை பார்த்தபோது, அதில் வைத்திருந்த ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை காணவில்லை. புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை