2 பேரிடம் ரூ.1.79 லட்சம் அபேஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் 2 பேர் ரூ. 1.79 லட்சம் இழந்துள்ளனர். தர்மாபுரியை சேர்ந்த நபர், மொபைல் செயலி லோன் ஆப் மூலம் கடன் பெற்று, குறித்த காலத்தில் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால், கடனை செலுத்தவில்லை எனக்கூறி, அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து அவருக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். இதையடுத்து, அந்த நபர் ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை மர்ம நபருக்கு அனுப்பி ஏமாந்துள்ளார். இதேபோல், நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து, அவரது அனுமதியின்றி 23 ஆயிரத்து 700 ரூபாய் எடுத்து மர்மநபர்கள் ஏமாற்றியுள்ளனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.