உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிவாரணமாக புதுச்சேரிக்கு ரூ. 200 கோடி 

நிவாரணமாக புதுச்சேரிக்கு ரூ. 200 கோடி 

மத்திய அரசுக்கு எம்.பி., கடிதம்புதுச்சேரி: பெஞ்சல் புயல் நிவாரணமாக ரூ. 200 கோடி வழங்க மத்திய அரசுக்கு செல்வகணபதி எம்.பி., கடிதம் எழுதி உள்ளார்.அவரது கடிதத்தில்; புதுச்சேரியில் ஒரே நாளில் 51 செ.மீ., மழை கொட்டியது. புயலுக்கு 5 பேர் இறந்தனர். வெள்ளத்தில் புதுச்சேரி, காரைக்காலில் 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஏராளமாவோர் வீடுகளை இழந்தனர். 50 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல பகுதியில் துணை மின் நிலையங்களில் தண்ணீரில் மூழ்கியதால் மின்சாரம் இன்றி மக்கள் தவித்தனர். மீட்கப்பட்ட மக்கள் பள்ளி, அரசு கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதால், மத்திய உள்துறை அமைச்சர் மத்திய உள்துறை அமைச்சர் ரூ. 200 கோடியை உடனடியாக நிவாரணமாக வழங்க வேண்டும். புதுச்சேரி காரைக்காலில் புயலால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட மத்திய குழுவை நியமிக்க வேண்டும். மத்திய குழு அறிக்கை சமர்ப்பித்த பின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு புயல் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை