மேலும் செய்திகள்
பெண்ணிடம் ரூ.2 லட்சம் 'அபேஸ்'
05-Dec-2024
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம், 2.48 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் மஞ்சினி கண்ணையன். இவரது உறவினரின் மகன் ஒருவர், ஆன்லைன் மூலம் பிரீபையர் கேம் விளையாடினார். இவருடன் விளையாடிய நண்பர்கள் மற்றும் அடையாளம் தெரியாதவர்கள், அவரிடமிருந்து 74 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி எடுத்துள்ளனர்.விநாயகபேட் பகுதியை சேர்ந்தவர் முரளி. ஆன்லைன் மூலம் காப்பீடு திட்டத்திற்கு 74 ஆயிரம் ரூபாய் கட்டி ஏமாந்தார். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இந்துஜா என்பவரை தொடர்பு கொண்ட நபர், கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார். பார்சல் தொடர்பாக, தாங்கள் அனுப்பும் செயலியை, பதவிறக்கம் செய்து, வங்கி விபரங்களை அதில், தெரிவிக்க வேண்டும் என, கூறினார். அதை நம்பி, அவர், வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்த அடுத்த நிமிடத்தில், அவரது கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது.இதுகுறித்து, 3 பேர் கொடுத்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
05-Dec-2024