மேலும் செய்திகள்
கடலுாரில் குட்கா விற்ற 7 கடைகளுக்கு அபராதம்
13-Sep-2025
புதுச்சேரி: கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதுச்சேரி சட்டமுறை எடையளவு கட்டுபாட்டு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி மேத்யூ பிரான்சிஸ் செய்திக் குறிப்பு; புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும், பல்பொருள் சிறப்பு அங்காடிகள்,பேக்கரி கடைகள்,சிறிய, பெரிய மளிகை கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடைகளில் முன்னரே பேக் செய்து விற்கப்படும் அனைத்து பொருட்களையும் சட்டமுறை எடையளவை விதிகள் 2011ன் படி அதிகபட்ச சில்லறை விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். உறையிடப்பட்ட பொருட்களில் குறிப்பிடப்பட்ட எம்.ஆர்.பி., விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால், சட்டமுறை எடையளவை சட்டம் -2009, பிரிவு 36ன் உடன், சட்டமுறை எடையளவை விதிகள் 2011ன் கீழ், முதல் முறை குற்றம் கண்டறியப்பட்டால் 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இதே குற்றத்தில் மீண்டும் ஈடுபட்டால் இரண்டாவது முறை 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், மூன்றாவது முறை 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது நீதிமன்ற வழக்கு பதிவு செய்யப்படும். மதுபானக் கடைகளில் மது பாட்டிகள் மற்றும் மளிகை கடைகளில் பாண்லே பால் ஆகியவை அதிகபட்ச விற்பனை விலையைவிட அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், சட்டமுறை எடையளவை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், விதிமீறிய கடைகளுக்கு தலா 2,500 அபராதமாக 10 மதுபானக்கடைகளுக்கு மொத்தம் 25 ஆயிரம் ரூபாயும்,2 மளிகை கடைகளுக்கு மொத்தம் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம், புதுச்சேரி எல்லைக்குட்பட்டு இயங்கும் அனைத்து வணிகத்தலங்களிலும் அதிகபட்ச சில்லரை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. இது தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏதேனும் புகாரளிக்க விரும்பினால், தட்டாஞ்சாவடியில் உள்ள சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0413-2262090, 2677064 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
13-Sep-2025