மேலும் செய்திகள்
3 பேரிடம் ரூ. 1.88 லட்சம் மோசடி
21-Jun-2026
புதுச்சேரி: கோரிமேட்டைச் சேர்ந்த பெண்ணின், 'வாட்ஸ் ஆப்' கணக்கில் அவரது சகோதரர் பெயரில் மருத்துவ அவசரம் பணம் தேவை என, குறுஞ்செய்தி மொபைல் எண்ணுடன் வைத்துள்ளது. அதை நம்பிய அப்பெண், அதில் இருந்த மொபைல் எண்ணிற்கு ரூ. 19 ஆயிரம் அனுப்பினார். அதன்பிறகே ஆன்லைன் மோசடி கும்பல் சகோதரரின் வாட்ஸ் ஆப் கணக்கை ஹேக் செய்து, அவரது பெயரில் போலியாக குறுஞ்செய்தி அனுப்பி பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. முத்தியால்பேட்டையை சேர்ந்த பெண், அறிமுகமில்லாத நபருடன் ஸ்னாப்சாட் மூலம் பழகி வந்தார். அப்பெண் தனது அந்தரங்கமான படத்தை நம்பிக்கையின் பேரில் அவருக்கு அனுப்பினார். மர்மநபர் அப்பெண்ணின் படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் என கூறி ரூ. 10 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். கலித்தீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த பெண் 2 ஆயிரத்து 299, லாஸ்பேட்டை சேர்ந்தவர் 9 ஆயிரம் என, 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 30 ஆயிரத்து 299 ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
21-Jun-2026