உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 ஜவுளி கடைகளில் ரூ.32 ஆயிரம் திருட்டு

2 ஜவுளி கடைகளில் ரூ.32 ஆயிரம் திருட்டு

புதுச்சேரி: ஜவுளிக்கடைகளுக்குள் புகுந்து, ரூ.32 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, சாரம், பாலாஜி நகரை சேர்ந்தவர் லட்சுமணன்,36. இவர் நேரு வீதியில் கடை எண்-162, 168ல் மகளிர்களுக்கான இரண்டு ஜவுளி கடைகள் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் 162ம் எண் கடையை திறந்து உள்ளே சென்றபோது, கடையின் மேல்தள பால் சீலிங் உடைந்திருந்தது. கல்லா பெட்டி திறந்து கிடந்தது. அதில், வைத்திருந்த 8 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது . திடுக்கிட்ட அவர், மற்றொரு கடையான 168யை திறந்து பார்த்தபோது, அங்கும், மர்ம நபர்கள் மாடி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, கல்லா பெட்டியில் இருந்த ரூ. 24 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இரு கடைகளிலும் துணிகள் திருடு போகவில்லை. புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் சம்பவ இடங்களை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை