சி.பி.ஐ., ரெய்டில் ரூ. 75 லட்சம் பறிமுதல்
காரைக்காலில் நடக்கும் ரூ. 7 கோடியே, 44 லட்சத்து ,59 ஆயிரம் மதிப்பிலான சாலை பணிக்கான 'டெண்டர் கிளியரன்ஸ்' கொடுக்க, தலைமை பொறியாளருக்கு, டெண்டர் தொகையில் 1 சதவீதமாக ரூ. 6 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர்.காரைக்கால் வந்த தலைமை பொறியாளர் தீனதயாளன் முன்னிலையில், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ. 2 லட்சம் பணம் பெற்றுள்ளார். அப்போது, சி.பி.ஐ., மூவரையும் சுற்றி வளைத்து பிடித்தது.அதைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர் இளமுருகுவின், காரில் இருந்து ரூ. 50 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தலைமை பொறியாளர் தீனதயாளன் வீட்டில் நடந்த 2 நாள் சோதனையில், ரூ. 65 லட்சம் ரொக்கம், காரைக்கால் பட்டம்மாள் நகரில் உள்ள செயற்பொறியளர் சிதம்பரநாதன் வீட்டில் நடந்த சோதனையில், ரூ. 8 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ. 73 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.லஞ்சமாக கொடுத்த ரூ. 2 லட்சம் பணத்தை சேர்த்து, மொத்தம் ரூ. 75 லட்சம் பணம் ரெய்டில் சிக்கியது.