உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ.6.41 லட்சம் அபேஸ்

 புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ.6.41 லட்சம் அபேஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 6.41 லட்சம் இழந்துள்ளனர். புதுச்சேரி, சண்முகாபுரத்தை சேர்ந்தவர், தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்தார். அவரது வங்கி கணக்கில் இருந்து, மர்ம நபர்கள் ரூ.5 லட்சத்து 29 ஆயிரம் எடுத்து ஏமாற்றியுள்ளனர். அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்மநபர், வங்கி அதிகாரி போல் பேசி, முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ், ரூ. 1.50 லட்சம் மானியத்தில் ரூ. 5 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என, கூறியுள்ளார். இதைநம்பி, மர்மநபருக்கு ரூ. 97 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதேபோல், பாகூரைச் சேர்ந்தவர் 10 ஆயிரத்து 379, அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 5 ஆயிரத்து 446 என மொத்தம் 4 பேர் 6 லட்சத்து 41 ஆயிரத்து 825 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !