உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை; முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: நாராயணசாமி

ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை; முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: நாராயணசாமி

புதுச்சேரி: என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி பெரும்பான்மையை இழந்து விட்டதால், முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது;

முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. பா.ஜ.,வில் 6 எம்.எல்.ஏ.,க்கள் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் தனி அணியாக செயல்படுகின்றனர். சார்லசை முதல்வர் ஆக்குவது தான் குறிக்கோள் என கூறியுள்ளனர்.பா.ஜ., 9 எம்.எல்.ஏ.,க் களில் 3 பேரின் ஆதரவு மட்டுமே அரசுக்கு உள்ளது. நியமன எம்.எல்.ஏ., ஒருவர் ஜோஸ் சார்லசை சந்தித்து இணைந்து செயல்படுகிறார்.அதனால் என்.ஆர்.காங்., 10, பா.ஜ., 3, நியமன எம்.எல்.ஏ., 2 பேர் என, மொத்தமுள்ள 33 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட சட்டசபையில், 15 பேரின் ஆதரவு மட்டுமே அரசுக்கு உள்ளது. காங்., தி.மு.க., பா.ஜ., தனி எம்.எல்.ஏ.,க்கள், சுயேச்சை எம்.எல். ஏ.,க்கள் 18 பேர் உள்ளனர்.எனவே, முதல்வர் ரங்கசாமி தார்மீக பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தேவைப்படும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்.புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி ஏன் பேசவில்லை என்பதை செல்வகணபதி எம்.பி., தெரிவிக்க வேண்டும்.புதுச்சேரி மாநில கடன் தள்ளுபடி, மத்திய நிதி கமிஷனில் சேர்க்காதது குறித்து செல்வகணபதி எம்.பி., குரல் கொடுத்தாரா. ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை