பள்ளிகளை ஆய்வு செய்ய சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை
புதுச்சேரி: பள்ளிகள் திறக்கும் முன் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்ய அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென,சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா தொற்று தற்போது நாடு முழுதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே, பள்ளிகள் திறக்கும் முன் சுகாதாரம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினை உருவாக்கி, அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.அதில், பள்ளி கட்டடங்கள், மேல்நிலை மற்றும் கீழ்நிலை குடிநீர் தொட்டிகள்,கழிப்பறைகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பள்ளிகளில் தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை அக்குழுவினர் ஆய்வு செய்து உறுதிப்படுத்த அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.