உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெட்டப்பாக்கத்தில் துப்புரவு முகாம்

நெட்டப்பாக்கத்தில் துப்புரவு முகாம்

புதுச்சேரி: நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் துப்புரவு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளர் அமைச்சர் ராஜவேலு துப்புரவு பணியினை துவக்கி வைத்தார். துப்புரவு பணியாளர்கள் மற்றும் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம் உள்ளிட்ட பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். மேலும், மக்கும் குப்பை, மக்காத குப்பை பரித்து கொடுக்க பொதுமக்களிடம் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் எழில்வேந்தன், பஞ்சாயத்து நோடல் அதிகாரி பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !