உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சங்கரதாஸ் நினைவு தினம் : கலைஞர்கள் மலரஞ்சலி

 சங்கரதாஸ் நினைவு தினம் : கலைஞர்கள் மலரஞ்சலி

புதுச்சேரி: சங்கரதாஸ் நினைவு தினத்தையொட்டி கலைஞர்கள் ஊர்வலமாக சென்று கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 103 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி கலை, இலக்கிய பெருமன்றம் சார்பில், வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து கருவடிக்குப்பம் வரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் படத்தை நாடகக் கலைஞர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தில் மயிலாட்டம், காளியாட்டம், பொய்க்கால் ஆட்டங்கள் நடந்தது. ஊர்வலத்திற்கு கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன் துவக்கி வைத்தார். ஊர்வலம் காந்தி வீதி வழியாக கருவடிக்குப்பம் சுடுகாட்டை அடைந்தது. புதுச்சேரி மற்றும் தமிழக நாடக் கலைஞர்கள், நடிகர்கள், தமிழர் பாரம்பரிய கலைக்குழுவினர், தெருக்கூத்து கலைஞர்கள், சிவகான பூதகான இசைக்குழு, தப்பாட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். மலரஞ்சலி கருவடிக்குப்பம் இடுகாட்டில் உள்ள சங்கரதாஸ் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் திருமுருகன், கலை பண்பாட்டு துறை இயக்குநர் முனுசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சிவா, சம்பத் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் போஸ் வெங்கட், திரைப்பட இயக்குநர் செல்வமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை