சங்கரதாசு சுவாமிகள் விழா
புதுச்சேரி: நாடக தந்தை சங்கரதாசு சுவாமிகள் விழா, கவிஞர் மன்னர் மன்னன் விழா புதுவை தமிழ் சங்கத்தில் நடந்தது. புதுவை தமிழ்சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் மோன்தாசு வரவேற்றார். துணை தலைவர்கள் திருநாவுக்கரசு, கோதண்டபாணி, துணை செயலர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். பொருளாளர் பாலசுப்ரமணியன் நோக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பழனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து புதுவை தமிழ்சங்க விருதினை தனசேகரனுக்கு வழங்கப்பட்டது. விழாவில் காலைமாமணி பாரதி, கவிஞர்கள் அன்பழகன், ஸ்ரீதர், வாகை, ஜெயந்தி, பரமேஸ்வரன், கயல்விழி, ஆட்சி குழு உறுப்பினர்கள் அருளரசு, ஜெயந்தி ராஜவேலு, சிவேந்திரன், ஆனந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.