உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுப்பிக்கவல்ல எரி சக்தியின் தேவை எதிர்காலத்தில் அதிகமாக இருக்கும் விஞ்ஞானி சதீஷ்குமார் பேச்சு

புதுப்பிக்கவல்ல எரி சக்தியின் தேவை எதிர்காலத்தில் அதிகமாக இருக்கும் விஞ்ஞானி சதீஷ்குமார் பேச்சு

புதுச்சேரி: காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லுாரியில், இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்ட் கன்ட்ரோல் துறை சார்பில் 'புதுப்பிக்கவல்ல மற்றும் நிலையான எரிசக்தி ஆதாரங்கள்' குறித்த திறன் மேம்பாட்டு ஊக்குவிப்பு பயிற்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் சந்தானசாமி துவக்கி வைத்தார். பெங்களூரு மத்திய கல்வி அமைச்சக அறிவியல் நிறுவன முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி சதீஷ்குமார் கலந்துகொண்டு, இயற்கையாக கிடைக்கக்கூடிய மரபு சார்ந்த எரிசக்தி ஆதாரங்கள் குறித்தும், வருங்கால தலைமுறையினருக்கு அவற்றின் பற்றாக்குறையின் ஆபத்து குறித்தும் விளக்கினார்.அவர் பேசுகையில், மரபு சாரா மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆதாரங்களின் அறிவியல் தொழில்நுட்பங்களை கொண்டு, மாணவிகள் கிராமப்புற சமுதாயத்திற்கு புதுமையான கண்டுபிடிப்புகளை தயாரிக்க முன்வர வேண்டும். இதுபோன்ற கண்டுபிடிப்புகளை அரசு ஊக்குவித்து மானியம் வழங்குகிறது. எதிர்காலத்தில் மரபு சாரா மற்றும் புதுப்பிக்கவல்ல எரி சக்தியின் தேவை மிகுதியாக இருக்கும். எனவே, சரியான திட்டமிடுதல் வாயிலாக பாலிடெக்னிக் பொறியாளர்கள், நாட்டின் தலை சிறந்த இளம் விஞ்ஞானியாக வர முடியும் என்றார்.பயிற்சியில், அனைத்து துறை மாணவிகள் பங்கேற்றனர்.ஒருங்கிணைப்பாளர்கள் விமலன், ராஜபாலன் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை