உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்காஞ்சியில் நிலங்களை காப்போம் விழிப்புணர்வு

திருக்காஞ்சியில் நிலங்களை காப்போம் விழிப்புணர்வு

வில்லியனுார்: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆத்மா திட்டத்தின் கீழ் நிலங்களை காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருக்காஞ்சி கிராமத்தில் இன்று (நவ.,5) நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருக்காஞ்சி வேளாண் அலுவலர் தினகரன் வரவேற்றார். பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரவி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இயற்கை விவசாயத்தின் மூலம் எவ்வாறு நிலங்களை பேணிக் காப்பது என டாக்டர் மணிமேகலை பேசினார். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் காரைக்கால் பஜன்கோ மாணவரகள் கலந்துகொண்டனர். ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் துறை கலபணியாளர்கள் சேகர் மற்றும் கருணாகரன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !