உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாராயணன் நாமத்தை சொல்லுங்கள் திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்

நாராயணன் நாமத்தை சொல்லுங்கள் திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்

புதுச்சேரி: நாராயணன் நாமத்தை நாம் சொன்னால் நமக்கு துன்பம் வராது என, திருச்சி கல்யாணராமன் உபன்யாசம் செய்தார்.பாரதப் பண்பாட்டு அமைப்பான வேத பாரதி சார்பில், புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் 15ம் தேதி உபன்யாசம் துவங்கியது. இரண்டாம் நளான நேற்று நளன் சரித்திரம் என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் உபன்யாசம் செய்து பேசியதாவது:நள மகாராஜா தமயந்தியை மணந்தார். சனி பகவான் நளனை பிடித்து துன்புறுத்த வேண்டும் என்று அவருடைய அரண்மனையில் 12 ஆண்டுகள் காத்திருந்தார். நளன் எந்த குற்றமும் செய்யவில்லை. சனி பிடித்தாலும் கூட ஏழரை ஆண்டுகள் தான் பிடிப்பார். ஆனால் நளனை 12 ஆண்டுகள் பிடித்து வைத்திருந்தார். போன பிறவியில் குற்றம் செய்திருப்பதால் இந்த ஜென்மத்தில் சனிபகவான் பிடித்து தொல்லை செய்கிறார் என்று நளன் நினைத்திருந்தார்.நளமகராஜா ஒருநாள் சரியாக கால் கழுவவில்லை. சனி பிடித்தார். அதனால் சூதாட்டம் ஆடி சகலத்தையும் இழந்து மனைவியுடன் கஷ்டப்பட்டார். இந்த துன்பம் அவருக்கு எப்படி வந்தது என்று புலவர் புகழேந்தி கூறும்போது,நாராயணன் நாமத்தை சொல்லவில்லையென்றால்,துன்பம் எப்படி வருமோ அப்படி வந்தது என்று சொல்லியுள்ளார். இதில் இருந்து நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நாராயணன் நாமத்தை நாம் சொன்னால் நமக்கு துன்பம் வராது. இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார். இன்று குலேசனும் கண்ணனும் என்ற தலைப்பிலும் உபன்யாசம் நடக்கின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ