உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி மாணவர் மாயம் போலீசார் விசாரணை

பள்ளி மாணவர் மாயம் போலீசார் விசாரணை

புதுச்சேரி: எட்டாம் வகுப்பு மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நைனார்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் விஷ்ணு கவுரிஸ்வரர், 13; மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். மொபைல் போன் பார்க்கும் பழக்க உள்ள விஷ்ணு கவுரிஸ்வரரை நேற்று (நவ.,20) இரவு அவரது தாய் கண்டித்தார். இதனால் அவர் கோபித்து கொண்டு இன்று (நவ.,21) அதிகாலை வீட்டில் இருந்து அவருடைய சைக்கிளில் வெளியே சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !