பள்ளி மாணவர் மாயம்
புதுச்சேரி: பள்ளிக்கு சென்ற மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காரைக்கால், பாராதியார் ரோட்டைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அருண்பாலா, 15. இவர், வில்லியனுார் பொறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 விடுதியில் தங்கி படித்து வந்தார்.கடந்த 24ம் தேதி காலை பள்ளிக்கு சென்றவர், மீண்டும் விடுதிக்கு வரவில்லை. இதையடுத்து விடுதி வார்டன் வேல்முருகன், முருகனுக்கு தகவல் தெரிவித்தார். இதுதுகுறித்து முருகன் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்