சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்
புதுச்சேரி : கோடை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 3 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் அதிகரித்த கோடை வெயில் காரணமாக கடந்த ஏப்ரல் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை 3 நாட்கள் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் ஆகஸ்ட் 2, 30 மற்றும் நவம்பர் 15 ஆகிய மூன்று நாட்கள் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி அறிவித்துள்ளார்.