உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புளு ஸ்டார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புளு ஸ்டார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வில்லியனுார், நவ. 9-அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த அறிவியல் கண்காட்சி துவக்க விழாவிற்கு பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பேராசிரியர் டாக்டர் செங்கேனி பெரியாண்டி குத்துவிளக்கேற்றி கண்காட்சி அரங்கை திறந்துவைத்து பார்வையிட்டார். பள்ளி முதல்வர் வரலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.பள்ளி மாணவர்கள் சார்பில் 225க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றது. தாகூர் கல்லுாரி தாவரவியல் துறை பேராசிரியர் ராஜமுருகன், பேராசிரியர்கள் முகமது ராஷிகான், திருமுருகன், புஷ்பலதா மாலா மற்றும் பாரதிவாணர் சிவா ஆகியோர் நடுவர்களாக பார்வையிட்டு சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்தனர். பேராசிரியர் டாக்டர் மதிவாணன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். பள்ளி துணை முதல்வர் சாலை சிவ செல்வம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி