உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு தொடக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி 

அரசு தொடக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி 

புதுச்சேரி: லாஸ்பேட்டை, பெத்து செட்டிப்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.தலைமை ஆசிரியை தமயந்தி ஜாக்குலின் வரவேற்றார். வட்டம்-1, பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.கண்காட்சியில் அறிவியல், கணிதம், புவியியல் போன்ற 300க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், பண்டைய கால நாணயங்கள், தபால் தலைகள், ரேடியோ, விவசாயக் கருவிகள் இடம் பெற்றன.மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி எலைடின் தலைவர் சந்திரசேகர் பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை