உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது.  தலைமை ஆசிரியர் நான்சி ஏஞ்சலின் தலைமை தாங்கினார். மதகடிப்பட்டு பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகி பங்கேற்று, அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து, சிறந்த படைப்புகளை தேர்வு செய்தார்.  கண்காட்சியில், முன் மழலையர், தொடக்க மற்றும் உயர்நிலை என மூன்று பிரிவுகளில் மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக, பயிர் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, காஸ் லீகேஜ் டாக்டர், சிறுதானிய உணவு வகைகள் பார்வையாளர்களை கவர்ந்தது. ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் செல்வகுமார் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில், மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை