மேலும் செய்திகள்
கீழுர் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
08-Nov-2025
புதுச்சேரி: லாஸ்பேட்டை வெங்கடசுப்பாரெட்டியார் அரசு தொழில்நுட்ப மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி துணை முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டார். விரிவுரையாளர் ஆனந்தன் வரவேற்றார். விரிவுரையாளர் மலையப்பன் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் செல்வா ஜீனா மரியா மோனிகா கலந்து கொண்டு, மாணவர்களின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தார். கண்காட்சியில், மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் தமிழ்வாணன் நன்றி கூறினார்.
08-Nov-2025