உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குருசுக்குப்பம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 குருசுக்குப்பம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: குருசுக்குப்பம், அரசு தொடக்கப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி துணை ஆய்வாளர் அனிதா கண்காட்சியை திறந்து வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். தலைமை ஆசிரியர் சீனுவாசன் தலைமை தாங்கினார். கண்காட்சியில் மாணவர்களின் 50க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. கல்வே காலேஜ் அறிவியல் ஆசிரியர் செந்தமிழ்ச் செல்வி நடுவராக இருந்து மாணவர்களின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் நித்தியாந்தி, அன்பரசி, கிரிஜா, ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை