உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சேந்தநத்தம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 சேந்தநத்தம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த சேந்தநத்தம் கிராமத்தில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. துவக்க விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி தலைமை தாங்கினார். ஆசிரியை புவனேஸ்வரி வரவேற்றார். கல்வித்துறை ஐந்தாம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன் கண்காட்சி அரங்கை துவக்கி வைத்து, பார்வையிட்டார். கண்காட்சியில் சந்திராயன்-3, நீர்த்தேக்க தொட்டி அலாரம், வயல் நீர் பாசன அலாரம், ஹைட்ரோ மின்சாரம், ஹைட்ரோ மின்தூக்கி, பெரிஸ்கோப் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ராஜலட்சுமி, பிரியபாரதி, விஜயலட்சுமி, சுப்புலட்சுமி மற்றும் ஊழியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை