உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுப்பையா பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி 

சுப்பையா பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி 

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம், சுப்பையா அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. பட்டதாரி ஆசிரியர் பாஸ்கர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.  காந்தி நகர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குமார், கண்காட்சியை திறந்து வைத்து, மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். இதில், மாணவிகளின் 100க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.  கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகள் மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர்.  பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !