| ADDED : நவ 21, 2025 05:48 AM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி அரசு துவக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியினை வட்டம் ஒன்றின் பள்ளி துணை ஆய்வாளர் அனிதா துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் கீதா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகராஜ் கலந்து கொண்டனர். கண்காட்சியில் எல்.கே.ஜி., முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் 150 மாணவர்கள் தங்களுடைய அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு சம்பந்தமான அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந் தன. கண்காட்சியை ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியை மல்லிகா, மணிமேகலை அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சுப்ரமணியன் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டம்-1 பள்ளி துணை ஆய்வாளர் அனிதா பரிசு வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் நித்தியா, பிரேமா, காயத்ரி, மாரியம்மா, ரேவதி, தமிழரசி, அருணா, கன்னிகா, உமாதேவி, ஊழியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.