உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கனுார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருக்கனுார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் கலை, அறிவியல் மற்றும் தனித்திறன் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சம்பத் தலைமை தாங்கினார். கல்வித்துறை முன்னாள் இணை இயக்குநர் முனுசாமி பங்கேற்று, கலை, அறிவியல் மற்றும் தனித்திறன் கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டார். துணை முதல்வர் சுசீலா சம்பத் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குநர் ஹரிஷ்குமார் வரவேற்றார். இதில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் 375க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் மற்றும் தனித்திறன் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. பெற்றோர்கள், அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் உட்பட 1,500க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். சிறந்த படைப்புகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு புதுச்சேரி மாநில தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், காசாளர் சிவசுப்ரமணியன், மதகடிப்பட்டு பாரததேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளி தாளாளர் இளமதியழகன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். நிர்வாக இயக்குநர் மோகன்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ