உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவேகானந்தா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

விவேகானந்தா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல், ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடந்தது. பள்ளியின் தாளாளர் செல்வகணபதி எம்.பி., முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா ஆகியோர் கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டனர். கண்காட்சியில் எல்.கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளின் 500க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அறிவியல் மட்டுமின்றி மற்ற பாடங்களான தமிழ் கணிதம் சமூக அறிவியல் ஆங்கில படைப்புகளையும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர். ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை