உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர் சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பழனி தலைமை தாங்கினார். பெண்கல்வி துணை இயக்குநர் ராமச்சந்திரன் கண்காட்சியை துவக்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். பெற்றோர் ஆசிரியர் குழு உறுப்பினர் நாகராஜன், மேலாண்மை குழு தலைவர் முனுசாமி வாழ்த்தி பேசினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரேணுகா, அறிவழகன், நாராயணி, பாரதிபாலா, ஷீலா விநாயகம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். காட்டேரிக்குப்பம் பள்ளி இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு தலைமை ஆசிரியர் ஹரி கோவிந்தன் தலைமை தாங்கினார். அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மீனா கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில், சந்திராயன்,ஆற்றல் சேமிப்பு, புவி வெப்பமடைதல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், மருத்துவ செடிகளின் பயன்பாடு மற்றும் பாரம்பரிய உணவு விழா நடந்தது. சிறந்த படைப்புகளை ஆசிரியர்கள் உதயபானு, விஜயலட்சுமி ஆகியோர் தேர்வு செய்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கீதாஞ்சலி, மெர்லின் போர்ஜியா உள்ளிட்டோர் செய்திருந்தனர். பெத்துச்செட்டிப்பேட்டை தியாகி நடேசன் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்க விழாவிற்கு தலைமையாசிரியர் தமயந்தி ஜாக்குலின் தலைமை தாங்கினார். ஆசிரியர் கலைவாணி வரவேற்றார். பள்ளி துணை இயக்குநர் (பெண் கல்வி) ராமச்சந்திரன், துணை ஆய்வாளர் அனிதா ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டனர். ஆசிரியர்கள் நித்யா, காயத்ரி, பரணி சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ